காஞ்சி: சங்கரா கல்வி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கிய நிறுவனம்..!

Kanchi Kamakodi

கல்வி,மருத்துவம் மற்றும் சமுதாய மேம்பாட்டுச் சேவைகளை மேலும் சிறப்பாக செய்ய காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடையாக சென்னையை சேர்ந்த ஆப்டஸ் வேல்யு தனியார் வீட்டு வசதி நிறுவனம் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கியது. ஆப்டஸ் வேல்யு வீட்டு வசதி நிறுவனம் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆப்டஸ் வேல்யூ வீட்டு வசதி நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் செயல் தலைவர் எம்.ஆனந்தன், நிர்வாக இயக்குநர் பி.பாலாஜி, துணைத் தலைவர் என்.ஸ்ரீகாந்த் ஆகியோர் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவர் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளைக்கு ரூ.1கோடி நன்கொடையை காசோலையாக வழங்கினார்கள். இத்தொகையினை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் பெற்றுக்கொண்டார்.

இத்தொகையானது காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளை செய்து வரும் கல்வி, மருத்துவம் மற்றும் சமுதாய மேம்பாட்டு சேவைகளை மேலும் சிறப்பாக செய்வதற்காக நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் எம்.ஆனந்தன் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசனும் உடன் இருந்தார்.

Neelan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உச்சம் தொட்ட தங்கம் விலை; சவரன் 51,000 க்கு விற்பனை

Fri Mar 29 , 2024
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.51,120க்கும் கிராம் ஒன்றுக்கு ரூ.140 உயர்ந்து, ரூ.6,390க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து, ரூ.80.80க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் அதிகரித்தது. தமிழகத்தில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரன் 280 ரூபாய் அதிகரித்து, 50,000 ரூபாயை எட்டியது. இந்நிலையில், இன்று (மார்ச் […]
Gold Image

You May Like